இலக்கணம்
* எழுத்திலக்கணம். சொல்லிக்கணம் ஆகிய இரண்டிலும் கூறப்படாத பொதுவான செய்திகள் சொல்லப்படுவதால் இது பொது என அழைக்கப்படுகிறது.
1. வெளிப்படை, குறிப்பு
* வெளிப்படையாகத் தன்பெருளை உணர்த்தும் சொல் வெளிப்படை எனவும், ஒரு தெடர் முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும் குறிப்பால் ஒரு பொருளைத் தருவது குறிப்பு எனவும் கூறுவர்.
எ.கா:
* உலகிலேயே பண்பாட்டில் தமிழ்நாடுதன் தலைசிறந்து விளங்குகின்றது.
* பூப்பந்து விளையாட்டில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது.
* இவ்விரு தொடர்களிலும் முதல் தொடரில் தமிழ்நாடு என்னும் சொல் வெளிப்படையாக இடத்தைக் குறித்து வந்துள்ளது.
* இரண்டாம் தொடரில், தமிழ்நாடு என்பது ஆகுபெயராய் நின்று குறிப்பால் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களைக் குறிக்கிறது.
2. குறிப்புச்சொற்கள்
* ஒன்றொழி பொதுச்சொல், விகாரச்சொல், தகுதிவழக்குச்சொல், ஆகுபெயர், அன்மொழித்தொகை, வினைக்குறிப்புச் சொல், முதற்குறிப்புச் சொல், தொகைக்குறிப்புச்சொல் போன்றவை குறிப்பால் தரும் சொற்களாம்.
ஒன்றொழி பொதுச்சொல்
* உயர்திணை, அஃறிணை ஆகிய இரண்டிலும் பொதுவான சொற்கள் உண்டு.
* ஒரு சொல், தொடரில் முன்னும் பின்னும் வரும் சொற்களின் தொடர்பாலும், குறிப்பாலும் ஒரு பாலை நீக்கி, மற்றொருபாலைச் சுட்டும். அதற்கு ஒன்றொழி பொதுச்சொல் என்று பெயர்.
3. இனங்குறித்தல்
* ஒருசொல், தன்பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும்.
எ.கா: கதிர்வேல் வெற்றிலை தின்றான்.
* இத்தொடரில் கதிர்வேல் வெற்றிலை மட்டுமா தின்றான். வெற்றிலையோடு அதற்கு இனமான பாக்கு, சுண்ணாம்பு முதலானவற்றையும் சேர்த்துத் தின்றான் எனப் பொருள்படுகிறது.
4. அடுக்குத்தொடர்
* அசைநிலைக்கும், விரைவு, சினம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள் நிலைக்கும், செய்யுளில் இசையை நிறைவு செய்வதற்கும் இரண்டு, மூன்று, நான்குமுறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
எ.கா:
* அன்றே அன்றே - அசைநிலை
* போ போ - விரைவு
* எறி எறி - சினம்
* வருக வருக - மகிழ்ச்சி
* தீ தீ தீ - அச்சம்
* நொந்தேன் நொந்தேன் - துன்பம்
* கோடி கோடி கோடி கோடியே - இசை நிறை
5. இரட்டைக்கிளவி
* இரட்டித்து நின்று பொருள் உணர்த்தும் சொற்கள் இரட்டித்தே வரும்; பிரித்தால் பொருள் தராது; இதனை இரட்டைக்கிளவி என்பர்.
* அடுக்குத்தொடருக்கும் இரட்டைக்கிளவிக்கும் உள்ள வேறுபாடு
அடுக்குத்தொடர் - இரட்டைக்கிளவி
1. சொற்கள் தனித்தனியே நிற்கும் - சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்
2. பிரித்தால் பொருள் தரும் - பிரித்தால் பொருள் தராது.
3. இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும் - இரட்டித்தே வரும்.
4. விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி - இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்.
தமிழ்ப்பழமொழிகள்:
* Money makes many things
- பணம் பத்தும் செய்யும்
* Eagles don't catch
files - புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
* Old is gold - காலம் பொன் போன்றது
* Prevention is better
than cure - வருமுன் காப்பதே சிறந்தது.
* Solw and steady wins
the race - முயற்சி திருவினையாக்கும்.
நற்றிணை
- மிழைகிழான் நல்வேட்டனார்
சொற்பொருள்:
* அரி - நெற்கதிர்
* செறு - வயல்
* யாணர் - புதுவருவாய்
* வட்டி - பனையோலைப் பெட்டி
* நெடிய மொழிதல் - அரசிடம் சிறப்புப் பெறுதல்
இலக்கணக்குறிப்பு:
* சென்ற வட்டி - பெயரெச்சம்
* செய்வினை - வினைத்தொகை
* புன்கண், மெய்கண் - பண்புத்தொகைள்
* ஊர(ஊரனே) - விளித்தொடர்.
பிரித்தறிதல்:
* அங்கண் - அம் + கண்
* பற்பல - பல + பல
* புன்கண் - புன்மை + கண்
* மென்கண் - மென்மை + கண்
ஆசிரியர் குறிப்பு:
* மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், கிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
* இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
* இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல் உள்ளன.
* இவர் சங்ககாலத்தவர்.
நூற்குறிப்பு:
* பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுவன.
* எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும், "நல்" என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படுவதும் நற்றிணையே.
* இஃது அகத்திணை நூலாகும்.
* நற்றிணை பல்வேறு காலங்களில் புலவரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல்.
* ஓரறிவு உயிரிகளையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்தியம்பும் நூலிது.
* ஐந்திணைக்குமான பாடல் உள்ளன.
* இதில் உள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை.
* இப்பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.
* நற்றிணைப் பாடல்கள் நானூறு.
* பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்
* பாடப்பகுதி - நற்றிணையிலுள்ள இருநூற்றுப் பத்தாவது பாடல்.
புறநானூறு
- கண்ணகனார்
சொற்பொருள்:
* துகிர் - பவளம்
* மன்னிய - நிலைபெற்ற
* சேய - தொலைவு
* தொடை - மாலை
* கலம் - அணி
இலக்கணக்குறிப்பு:
* பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் - எண்ணும்மைகள்
* மாமலை - உரிச்சொற்றொடர்
* அருவிலை, நன்கலம் - பண்புத்தொகைகள்
பிரித்தறிதல்:
* அருவிலை - அருமை + விலை
* நன்கலம் - நன்மை + கலம்
ஆசிரியர்குறிப்பு:
* கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.
* கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபொழுது, பிசிராந்தையாரின் வருகைக்காக் காத்திருந்தான்.
* அப்போது, அவருடன் இருந்தவர் கண்ணகனார் ஆவார்.
* அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்திய கண்ணகனார் இப்பாடைப் பாடினார்.
நூற்குறிப்பு:
* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
* இது, புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
* இந்நூல் சங்ககால மக்களின் வாழ்க்கைநிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது.
* தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவுகிறது.
* பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல் - இருநூற்றுப் பதினெட்டாம் பாடல்
உரைநடை: பேச்சுக்கலை
* ஆய கலைகள் அறுபத்து நான்கு
* நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை - பேச்சுக்கலை
* மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் - தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார் முதலியோர்.
* மேடைப்பேச்சில் உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும்.
* மேடைப்பேச்சின் முக்கூறுகள் - எடுத்தல், தொடுத்தல், முடித்தல்
No comments:
Post a Comment