இந்திய நாடாளுமன்றம்

  இந்திய நாடாளுமன்றம்  





இந்திய நாடாளுமன்றம் 16 வது மக்களவை வகை வகை ஈரவை அவைகள் மாநிலங்களவை
மக்களவை தலைமை யேற்பவர்மாநிலங்களவைத் தலைவர்முகம்மது அமீத் அன்சாரி, (சுயேச்சை)
2007 முதல்பெரும்பான்மைத் தலைவர் (மாநிலங்களவை)அருண்_ஜெட்லி,பாரதிய ஜனதா கட்சி
2014 முதல்மக்களவைத் தலைவர்திருமதி சுமித்ரா மகாஜன், பாரதிய ஜனதா கட்சி
2014 முதல்பெரும்பான்மைத் தலைவர் (மக்களவை)நரேந்திர மோதி,பாரதிய ஜனதா கட்சி
2014  முதல்கட்டமைப்புஉறுப்பினர்கள்802 (250 மாநிலங்களவை +
    552 மக்களவை)கூட்டரங்கம்சன்சத் பவன்இணையத்தளம்இந்திய நாடாளுமன்றம்

மக்களவை ,மாநிலங்களவை

இந்திய நாடாளுமன்றம் அல்லதுஇந்தியப் பாராளுமன்றம், இரு சட்ட அவைகளை கொண்டுள்ளது. அவைமாநிலங்களவை (Rajya Sabha) மற்றும்மக்களவை (Lok Sabha) ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.

மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதேர்தல் நடைபெறும்.

செயல் அதிகாரம் பிரதமரிடமும்அவரின் தலைமையின் கீழ் இயங்கும்அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின்தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.

பாராளுமன்ற விதிகளும் நடைமுறையும்

பாராளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை) கீழவையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி, எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர். மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.



No comments:

Post a Comment